ரூ.637 கோடி மதிப்பிலான சொத்துக்கள்; 5 வங்கி கணக்குகள்; சொகுசு அபார்ட்மென்ட் முடக்கம்!

Home > தமிழ் news
By |
ரூ.637 கோடி மதிப்பிலான சொத்துக்கள்; 5 வங்கி கணக்குகள்; சொகுசு அபார்ட்மென்ட் முடக்கம்!

வைர வணிகர் நிரவ் மோடிக்கு சொந்தமான சுமார் 637 கோடி ரூபாய் மதிக்கத்தக்க சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.  முன்னதாக பஞ்சாப் நேஷனல் வங்கியிடமிருந்து 13,000 கோடி ரூபாயும், கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் பிஎன்பி வங்கியிடமிருந்தும் அதிகமாக பெற்றிருந்த கடனை திருப்பி கட்டாததால் அவர் மீது அளிக்கப்பட்ட வங்கி மோசடி குற்றச் சாட்டப்பட்டது.  சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை  இந்த ஆண்டு தொடக்கத்தில் இதனை கண்டுபிடித்த பின்னர் அவரை விசாரிக்க முயற்சித்தபோது நிரவ் மோடி வெளிநாட்டுக்கு சென்றார். 

 

இந்நிலையில் அமலாக்கத்துறையின் தீவிர நடவடிக்கைக்கு பிறகு கடந்த மார்ச் மாதம்  இந்தியாவில் உள்ள நிரவ் மோடியின் சொத்துக்களும், தற்போது வெளிநாட்டில் உள்ள 637 கோடி மதிப்பிலான  அசையா சொத்துகள், சொகுசு அபார்ட்மென்ட், நகைகள், வங்கிக் கணக்கு இருப்பு தொகை உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் 278 கோடி இருப்புடன் இன்னும் 5 வெளிநாட்டு வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

NIRAVMODI, PNBSCAM, PNBINDIA