மனஉறுதி இருந்தால்,புற்று நோய் என்ன... யுவராஜ் சிங் உருக்கம்!
Home > தமிழ் newsகிரிக்கெட் ரசிகர்களால் யுவி என செல்லமாக அழைக்கப்படுபவர் யுவராஜ் சிங்.இந்திய அணியில் தற்போது இடம் பெறவில்லை என்றாலும் என்றும் ரசிகர்களின் நெஞ்சங்களில் யுவிக்கு தனி இடம் உண்டு.
கடந்த 2011-ஆம் ஆண்டு, உலக கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு அவருக்கு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. புற்று நோயால் அவதிப்பட்ட போது, எப்படிப்பட்ட உணர்ச்சியால் ஆட்கொள்ளப்பட்டார் என்றும் அதை தான் எப்படி கடந்து வந்தேன் என்பது குறித்தும் யுவராஜ் மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில் "பேட்டிங்கில் உச்சபட்ச ஃபார்மில் இருக்கும் போது தான் புற்று நோய் இருக்கும் சோக செய்தி தெரிந்தது. புற்று நோய் இருப்பதும் அதற்கு உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதும் எனக்கு தெரியபடுத்தப்பட்டது. இந்நிலையில் கிரிக்கெட்டிலிருந்து விலகி கீமோதெரபி சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.அதன் பிறகு சிகிச்சையை முடித்து, கடந்த 2012 ஆம் ஆண்டு, இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்தேன்.
மேலும் ‘உலக கோப்பையில் வெற்றி பெற்ற ஒரு சில நாட்களிலேயே புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. எனக்கு உலக கோப்பை குறித்து இருந்த அனைத்த சந்தோஷங்களையும் புற்று நோய் குறித்தான செய்தி பறித்தது. எனது வாழ்க்கையின் மிக இருண்ட பகுதி அது.
உலக கோப்பையில் வெற்றி பெற்று, தொடர் நாயகன் விருதை வாங்கும் போது, வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தேன். ஆனால், அடுத்த கணமே சறுக்கி விழுந்தேன். அது தான் வாழ்க்கை. ஆனால் மனஉறுதியும் தன்னபிக்கையும் இருந்தால் வாழ்க்கையின் எந்த நிலையிலிருந்தும் மீண்டு வரலாம் என்ற நம்பிக்கை விதைகளை விதைக்கிறார் யுவி.