'நான் அனுபவிச்சு சொல்றேன்'....ஃபேஸ்புக்ல மட்டும் லவ் பண்ணிடாதிங்க ப்ரோ!

Home > தமிழ் news
By |
'நான் அனுபவிச்சு சொல்றேன்'....ஃபேஸ்புக்ல மட்டும் லவ் பண்ணிடாதிங்க ப்ரோ!

ஃபேஸ்புக் மூலமாக யாரும் காதலிக்க வேண்டாம் என பாகிஸ்தான் சிறையில் இருந்து திரும்பிய ஹமிது நேஹல் அன்சாரி இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

 

மும்பையைச் சேர்ந்தவர் ஹமிது நேஹல் அன்சாரி.இவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவருக்கும் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டது.தொடக்கத்தில் நண்பர்களாக இருந்த இருவரும்,நாளடைவில் காதலர்களாக மாறினார்கள்.இதனால் அந்தப் பெண்ணும் அன்சாரியும் தினமும் சாட் செய்துள்ளனர்.திடீரென அந்த பெண் அன்சாரியுடனான நட்பை துண்டித்தார்.இதனை சற்றும் எதிர்பாராத அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்தார்.

 

இறுதியில் காதலியை சந்திப்பதற்காக ஆப்கானிஸ்தான் வழியாக 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்றார். அங்கு கரக் நகர் ஓட்டல் ஒன்றில் 2 நாள் தங்கியிருந்த அவரை,பாகிஸ்தான் உளவு பிரிவு போலீசார் கைது செய்தனர். மொத்தம் 6 ஆண்டுகள் சிறையில் இருந்த அவர் பாகிஸ்தான் சிறையில் இருந்து சமீபத்தில்  விடுவிக்கப்பட்டார்.

 

இந்நிலையில் இளைஞர்களுக்கு  ஹமிது நேஹல் அன்சாரி,தனது வாழ்கையில் நடந்த சம்பவங்கள் மூலமாக பல அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில் சமூக வலைதளங்களில் காதலில் விழாதீர்கள்.பெற்றோர்களிடன் எதையும் மறைக்காதீர்கள்.அவர்களிடம் மனம் திறந்து பேசுங்கள்.ஒரு நாட்டுக்குள் செல்ல விரும்பினால் சட்டரீதியிலான வழிமுறைகளை பின்பற்றுங்கள். நான் பாகிஸ்தானில் இருந்து திரும்புவேன் என்று எதிர்பார்க்கவில்லைஎன உணர்ச்சி பூர்வமாக தெரிவித்தார்.

FACEBOOK, PAKISTAN, HAMID ANSARI