‘இந்த விஷயத்துல இந்தியா-பாகிஸ்தான் இணைந்து செயல்படலாம்’: ட்ரம்ப்பின் சர்ச்சை பேச்சு!

Home > தமிழ் news
By |

இந்தியத் துணைக்கண்டத்தையே அதிரவைத்த புல்வாமா தாக்குதல் சமீபத்தில் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் நிகழ்ந்தது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன் கருத்தினை அதிரடியாக தெரிவித்துள்ளார்.

‘இந்த விஷயத்துல இந்தியா-பாகிஸ்தான் இணைந்து செயல்படலாம்’: ட்ரம்ப்பின் சர்ச்சை பேச்சு!

அண்மையில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில், ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படைத் தீவிரவாதி நடத்திய தாக்குதலால், இந்திய துணை ராணுவப் படையினர் (CRPF)40-க்கும் பக்கமானோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.

இந்தியாவைப் பொருத்தவரை பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சாட்டியது. இந்தியாவின் பல்வேறு தரப்பில் இருந்தும் பாகிஸ்தானின் மீதான குற்றச்சாட்டுகளும் கண்டனங்களும் வலுத்தன. மிகவும் வேண்டப்பட்ட நாடு என்று இந்தியாவால் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டிருந்த முக்கியமான அந்தஸ்தினையும் இந்தியா திரும்பப் பெற்றுக்கொண்டது.

இந்த நிலையில் இதுகுறித்து முழுமையான அறிக்கையினை விரைவில் வெளியிடுவதாகாக் கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நடந்த தாக்குதல் தனக்கு வருத்தமளிப்பதாகவும், இந்த விஷயத்தில் இந்தியா-பாகிஸ்தான் இணைந்து விசாரணை மேற்கொள்ள   வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுபற்றி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் பேசிய ட்ரம்ப், இந்தியாவில் நடந்த இந்த தாக்குதல் குறித்து, தொடர்ந்து தான் கேட்டு வருவதாகவும் முக்கிய, உடனடி தகவல்கள் தனக்கு  குறித்த நேரத்தில் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உள்துறை துணை செய்தித்தொடர்பாளர் இந்தியாவுக்கு தேவையான உதவிகளைச் செய்யவும் அமெரிக்கா தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதேபோல் விசாரணைக்குத் தேவையான ஒத்துழைப்பை பாகிஸ்தான் வழங்க வலியுறுத்துவோம் எனவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார். 

மேலும் தாக்குதலுக்கு காரணமாக சொல்லப்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் மீது பாகிஸ்தான் தக்க நடவடிக்கையை உடனடியாக எடுத்து, தீவிரவாதத்துக்கான ஆதரவு நிலைப்பாட்டை கைவிட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, போல்டன், வெள்ளை மாளிகை செயலாளர் சாரா சாண்டர்ஸ் உள்ளிட்டோரின் தனிப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

PULWAMAATTACK, DONALDTRUMP, PULWAMATERRORATTACK