சென்னை மயிலாப்பூரில் பகுதியில் உள்ள ஆர்.எம்.கிளினிக்கிற்கு பெண் ஒருவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

 

அப்போது அங்கிருந்த மருத்துவரான சிவகுருநாதன், அப்பெண்ணின் கணவரை வெளியில் அனுப்பிவிட்டு சிகிச்சைக்கு வந்த பெண்ணின் மேலாடையை கழற்றி தனது செல்போனில்ஆபாசமாக புகைப்படம் எடுத்துள்ளார்.

 

எதிர்பாராதவிதமாக இதனைக்கண்ட அப்பெண்ணின் கணவர் உள்ளே சென்று என்ன செய்கிறீர்கள்? எனக் கேட்க, அதிர்ந்து போன மருத்துவர் தனது செல்போனில் இருந்த புகைப்படங்களை அழித்து விட்டு, மெமரி கார்டையும் கழற்றி எறிந்து விட்டார்.

 

எனினும் அவரிடமிருந்த மற்றொரு செல்போனை வலுக்கட்டாயமாக பிடுங்கிப் பார்த்தபோது, அதில் 60-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் ஆபாசப் படங்கள் இருந்துள்ளன.

 

இதனைக்கண்ட பொதுமக்கள் அவரைப் பிடித்து அருகிலிருந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சிவகுருநாதன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார், தற்போது அவரைக்கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BY MANJULA | APR 27, 2018 4:24 PM #SEXUALABUSE #CHENNAI #DOCTOR #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS