சட்டப்பேரவையில் இன்று திமுக துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் கிராமிய பாடல்களை பாடிக்காட்டினார். அதனைப்பார்த்த அவைத்தலைவர் தனபால், "நீங்கள் நாடகங்களில் நடித்தது உண்டா?’ என்று துரைமுருகனைப் பார்த்து கேட்டார்.

 

பதிலுக்கு துரைமுருகன் ''நான் சிறுவயதில் நாடகங்களில் நடித்திருக்கிறேன். ஷேக்ஸ்பியர் சொன்னதுபோல் இந்த உலகமே நாடக மேடை. நாம் அனைவருமே இங்கு நடித்துக்கொண்டிருக்கிறோம், அனைத்து எம்எல்ஏ-க்களும் நடிக்கிறோம். சபாநாயகர் ஆகிய நீங்களும் நடித்துக்கொண்டு இருக்கிறீர்கள்,'' என பதிலளித்தார்.

 

இதற்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம், "மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2001-ம் ஆண்டு அவையில் பேசும்போது, துரைமுருகன் நவரசம் வெளிப்படும் விதமாகப் பேசுவார்,'' என புகழ்ந்ததாக தெரிவித்தார். அதற்கு ''நான் சினிமாத் துறைக்குப் போயிருந்தால் ஜெயலலிதாவோடு நடிக்க வாய்ப்புக் கிடைத்திருக்கும். நானும் சிவாஜி கணேசன் போன்று ஆகியிருப்பேன்'' என துரைமுருகன் தன்னடக்கத்துடன் பதிலளித்தார்.

 

துரைமுருகனின் இந்த பதில்களால் இன்றைய அவை முழுவதும் சிரிப்பு சத்தத்தில் அதிர்ந்தது.

BY MANJULA | JUN 27, 2018 2:55 PM #DMK #MKSTALIN #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS