பிக்பாஸ் எனும் 'மூடர்கூடத்திலிருந்து' வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்!

Home > தமிழ் news
By |
பிக்பாஸ் எனும் 'மூடர்கூடத்திலிருந்து' வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்!

பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று சற்றும் எதிர்பாராதவிதமாக சென்றாயன் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். இதுகுறித்து சமூக  வலைதளங்களில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

 

இந்தநிலையில் மூடர் கூடம் புகழ் இயக்குநர் நவீன் தனது டிவிட்டர் பக்கத்தில்,''வாடா தம்பி சென்றாயா. வந்து பொழப்ப பாரு.பிக்பாஸ் எனும் மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்,'' என தெரிவித்துள்ளார்.

 

மற்றொரு ட்வீட்டில் மேலும் ஒருமுறை சென்றாயனுக்காக என, தமிழன்டா பாடலின் வீடியோ பதிவையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.