"பதக்கம் மட்டும் போதுமா,பசியை போக்க"...வறுமையால் குல்ஃபி விற்கும் தேசிய குத்து சண்டை வீரர்!

Home > தமிழ் news
By |
"பதக்கம் மட்டும் போதுமா,பசியை போக்க"...வறுமையால் குல்ஃபி விற்கும் தேசிய குத்து சண்டை வீரர்!

ஆசிய போட்டிகளில் சாதித்தவர்,பல வெள்ளி மற்றும் தங்க பதக்கங்களை வென்றவர் இன்று தனது அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு  குல்ஃபி விற்று வருகிறார்.

 

தேசிய அளவிலான போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று ஏகப்பட்ட பதக்கங்களை வென்றவர்,ஹரியானாவை மாநிலத்தை சேர்ந்த குத்துச் சண்டை வீரர் தினேஷ் குமார்.தனது அபார திறனால் இதுவரை 17 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.ஆனால் இத்தனை சிறப்புகள் இருந்தும் எந்த ஒரு பயனும் இல்லை.காரணம் தனது தினசரி வாழ்வாதாரத்திற்கு தெரு தெருவாக சென்று குல்ஃபி விற்று வருகிறார்.அதில் கிடைக்கும் பணத்தை வைத்தே தனது பசியை போக்கி வருகிறார்.

 

தினேஷ் குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினேஷ் குமாரின் சிசிக்சைக்காக தந்தை பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். ஏற்கெனவே தினேஷ் குமார் சர்வதேச போட்டியில் பங்கேற்கவும், பயிற்சி பெறவும் தினேஷ் குமாரின் தந்தை வங்கியில் கடன் வாங்கியிருக்கிறார். சிகிக்சைக்கான கடனும் சேர ஒட்டுமொத்த குடும்பமுமே கடனில் சிக்கியுள்ளது.

 

தற்போது சிகிச்சை முடிந்து நல்ல நிலையில் இருக்கும் தினேஷ் குமார்,அந்த கடன்களை அடைப்பதற்காக வீதி வீதியாக சென்று குல்ஃபி விற்று வருகிறார்.இதுகுறித்து அவர் கூறும்போது,"நான் தேசிய அளவிலான போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று இந்தியாவிற்காக வெற்றிகளை தேடி தந்திருக்கிறேன்.ஆனால் என்னுடைய ஏழ்மை நிலையை மத்திய அரசோ,மாநில அரசோ கண்டுகொள்ளவில்லை.இதுக்குறித்து பலமுறை நான் முறையிட்டும் அவர்கள் அதை கண்டுக்கொள்ளவில்லை.

 

அதனால் எனக்காக என் அப்பா வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அவர் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.இதனால் நானே குல்ஃபி விற்று கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து வருகிறேன்.மேலும் எனக்கு நிலையான ஒரு அரசாங்க வேலையை அரசாங்கம் வழங்கம் வேண்டும். இப்போதும் நான் ஒரு சிறந்து விளையாட்டு வீரர்ததான். என்னால் இளம்வீரர்களை சர்வதேச அளவில் ஜொலிக்க வைக்க முடியும்.அவர்களுக்கான பயற்சியாளராகவாவது என்னை நியமிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ASIAN GAMES, BOXER, HARYANA, KULFI, DINESH KUMAR