'என்ன எந்த நேரத்திலும் கொலை செஞ்சிருவாங்க'...டைரியிலிருந்து கிடைத்த 'அனலியாவின் 18 பக்க கடிதம்'!

Home > தமிழ் news
By |

மர்மமான முறையில் மரணமடைந்த,செவிலியர் அனலியா எழுதிய 18 பக்கங்கள் அடங்கிய கடிதம் தற்போது கிடைத்துள்ளது. அதில் தன்னுடைய கணவர் குடும்பத்தால்,தான் எப்போது வேண்டுமாலும் கொலை செய்யப்படலாம் என அனலியா எழுதியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'என்ன எந்த நேரத்திலும் கொலை செஞ்சிருவாங்க'...டைரியிலிருந்து கிடைத்த 'அனலியாவின் 18 பக்க கடிதம்'!

கேரளாவை சேர்ந்தவரான அனலியா பி.எஸ்சி படித்துவிட்டு செவிலியராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் அவரை காணவில்லை என,அவருடைய கணவர் ஐஸ்டின் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இதனையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,சில நாட்களுக்கு பிறகு பெரியார் ஆற்றிலிருந்து அனலியாவை பிணமாக மீட்டனர்.மகளின் மரண செய்தியினை அறிந்து கேரளாவிற்கு விரைந்த அவரது தந்தை ஹூய்ஜென்ஸ்,அனலியாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டது.

இதனையடுத்து காவல்நிலையத்தில் முறையிட்ட அவர்,தன்னுடைய மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.ஆனால் அவரது கணவரின் குடும்பத்தால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும்,அவர் தற்கொலை செய்திருப்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகமாக இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு அனலியாவின் டைரி கிடைத்துள்ளது.மேலும் 18 பக்கங்களுக்கு அவர் எழுதிய கடிதமும் சிக்கியுள்ளது.அனலியாவின் டைரியில் 'பல கைகளில் ஒரு பெண்ணை சித்ரவதை செய்வது போன்றும், கண்ணீரோடு ஒரு பெண் பயந்தவாறும் கடிதம் எழுதுவது போன்றும் அதில் வரையப்பட்டுள்ளது.

கண்ணீர் மல்க அனலியா எழுதியுள்ள கடிதத்தில் ''திருமணம் முடிந்து நல்ல வேலை,நல்ல குடும்ப வாழ்கை என தாம் எண்ணியிருந்ததாகவும் அதில் குறிப்பிடுள்ளார்.மேலும் தன்னுடைய கணவர் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து அவருக்கு வேலை பறிபோனதுடன்,செவிலியர் பணியை தம்மையும் உதறும்படி கணவர் மன ரீதியாக துன்புறுத்தியதாக அனலியா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கருத்தரித்திருந்த அனலியா,தன்னுடைய செவிலியர் பணியை விட்டுவிட்டு கேரளா திரும்பினார்.குழந்தை பிறந்தால் பிரச்சனை எல்லாம் சரி ஆகிவிடும் என எண்ணியவருக்கு,கேரளா வந்த பின்பு கணவரின் குடும்பத்தாலும் பிரச்னை அதிகமானது.இந்நிலையில் அனலியா இறப்பதற்கு முன்பு அவருடைய சகோதருக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் தன்னுடைய கணவர் குடும்பத்தால்,தான் எப்போது வேண்டுமாலும் கொலை செய்யப்படலாம் எனவும் தனக்கு என்ன நேர்ந்தாலும் ஐஸ்டின் குடும்பத்தார் தான் காரணம் என எழுதியுள்ளார்.

இதனையடுத்து அனலியா எழுதிய டைரி மற்றும் அவர் அனுப்பிய குறுஞ்செய்தியை எடுத்துக்கொண்டு அவரின் தந்தை ஹூய்ஜென்ஸ்,கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து முறையிட்டுள்ளார்.இதனையடுத்து புலனாய்வு துறைக்கு அனலியா மரணம் குறித்து விசாரித்து,அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில், அனலியாவின் கணவர் ஜஸ்டின் சாவக்காடு நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சரணடைந்திருக்கிறார். அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

KERALA, MURDER, ANNLIYA HUYGENS