தனது மனைவி சாக்ஷியுடன் இணைந்து சல்மான் கான் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ரேஸ் 3' படத்தை தோனி பார்த்து ரசித்துள்ளார்.

 

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'ரேஸ் 3'. நாளை மறுநாள் (ஜூன்15) இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இதனையொட்டி பிரபலங்கள் மற்றும் தனது நண்பர்களுக்காக நேற்றிரவு சிறப்புக்காட்சி ஒன்றை நடிகர் சல்மான் ஏற்பாடு செய்திருந்தார்.

 

இதற்கு தனது நண்பர் தோனிக்கும் சல்மான் அழைப்பு விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து 'ரேஸ் 3' படத்தின் சிறப்புக்காட்சியை, தோனி தனது மனைவி சாக்ஷியுடன் சேர்ந்து ரசித்துள்ளார். பாலிவுட் வரலாற்றில் முதன்முறையாக சல்மானின் 'ரேஸ் 3' திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை 130 கோடிகளுக்கு விற்பனையாகிருப்பது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | JUN 13, 2018 3:29 PM #MSDHONI #SALMANKHAN #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS