'பல மாதங்களுக்கு பிறகு வலை பயிற்சியில் 'தல'...பட்டையை கிளப்புவாரா?ஆவலில் ரசிகர்கள்!

Home > தமிழ் news
By |

பல மாதங்களாக ஓய்வில் இருந்த முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, சிட்னி மைதானத்தில் வலைப் பயிற்சி மேற்கொண்டார்.

 

'பல மாதங்களுக்கு பிறகு வலை பயிற்சியில் 'தல'...பட்டையை கிளப்புவாரா?ஆவலில் ரசிகர்கள்!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி டெஸ்ட் தொடரில் கோப்பையை வென்ற புத்துணர்ச்சியோடு,மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கிறது.இந்த போட்டிகள் வரும் 12-ம் தேதி தொடங்க இருக்கிறது.

 

ஒரு நாள் போட்டியில் பங்கேற்பதற்காக, முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் தோனி, ரோகித் சர்மா, கேதர் ஜாதவ், கலீல் அகமது ஆகியோர்  சிட்னிக்கு வந்து சேர்ந்தனர்.இந்நிலையில் பல மாத ஓய்விற்கு பின்பு முன்னாள் கேப்டன் தோனி வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.

 

அவருடன் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கரும் உடனிருந்தார்.பேட்டிங் திறன் நன்றாக இல்லை என கடும் விமர்சனங்கள் தோனி மீது வைக்கப்பட்டிருக்கும் நிலையில்,அவர் ஒரு நாள் போட்டியில் களமிறங்குவது,ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.