'இயக்குநர் தனுஷின் 2-வது படம் இதுதான்'.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிறுவனம்!
Home > தமிழ் news
பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நடிகர் தனுஷின் 2-வது படம் குறித்த அறிவிப்பினை, தேனாண்டாள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தேனாண்டாள் நிறுவனம் வெளியிட்டுள்ள டிவீட்டில், ''எங்களது அடுத்த படத்தின் இயக்குநர் தனுஷ் என தெரிவித்து நடிகர்,நடிகைகளின் பெயரினையும் வெளியிட்டுள்ளது. அதன்படி தனுஷ், நாகார்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா, சரத்குமார், ஸ்ரீகாந்த், அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.
இப்படத்துக்கு இசையமைப்பாளராக சான் ரோல்டன், கலை இயக்குநராக முத்துராஜ், எடிட்டராக ஜிகே பிரசன்னா, ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.