"யாரும் ரிஸ்க் எடுத்து செல்ஃபி எடுக்காதிங்க":மன்னிப்பு கோரிய முதல்வரின் மனைவி!

Home > தமிழ் news
By |
"யாரும் ரிஸ்க் எடுத்து செல்ஃபி எடுக்காதிங்க":மன்னிப்பு கோரிய முதல்வரின் மனைவி!

செல்ஃபி மோகத்தால் மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா சொகுசு கப்பலின் ஆபத்தான பகுதியில் நின்று கொண்டு செல்ஃபி எடுத்த விவகாரம் கடும் அதிர்ச்சியையும்,சர்ச்சையையும் ஏற்படுத்தியது.இந்நிலையில் தனது செயலுக்கு மன்னிப்பு கோருவதாக அம்ருதா பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பலின் போக்குவரத்தை மகாராஷ்டிரா முதலமைச்சரான தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கடந்த 20ம் தேதி தொடங்கி வைத்தனர். அப்போது தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் உடன் இருந்தார்.

 

அவர் கப்பலின் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சென்று,யாரும் எதிர்பாராத நேரத்தில் அதில் அமர்ந்தவாறு செல்ஃபி எடுத்த வண்ணம் இருந்தார்.அந்த பகுதியானது கடல் அலைகள் உரசும் கப்பலின் அடிப்பகுதியின் நுனியாகும்.இதை கண்ட  பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அதை கண்டுகொள்ளாமல் ,செல்ஃபி எடுப்பதிலே மும்முரமாக இருந்தார்.முதல்வர் மனைவின் செயலை கண்ட பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் தலையில் அடித்துக்கொண்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளகளில் வைரலாக பரவி,கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

 

இந்நிலையில் மாராத்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், "நான் தவறு செய்ததாக யாரேனும் நினைத்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். செல்பி எடுப்பதற்காக இளைஞர்கள் யாரும் அபாயகரமான செயல்களில் ஈடுபட கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் கப்பலில் தான் செல்பி எடுத்த பகுதி பாதுகப்பானதாக தான் இருந்தது என்று கூறியுள்ளார். நான் செல்பி எடுத்த பகுதிக்கு கீழே இரண்டு படிகள் இருந்தது என்றார்.

 

கப்பலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரின் எச்சரிக்கையை மீறி அம்ருதா நடந்து கொண்டது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.மேலும் முதல்வரின் மனைவியே இவ்வாறு நடந்து கொள்ளலாமா என பலரும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

MUMBAI, BJP, DEVENDRA FADNAVIS, AMRUTA FADNAVIS, MAHARASHTRA, APOLOGISES, SELFIE