"அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்":சென்னையில் இரட்டை குழந்தைகள் பலியான பரிதாபம்!
Home > தமிழ் newsடெங்கு காய்ச்சல் பாதிப்பால், சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரட்டை குழந்தைகள், இன்று சிகிச்சை பலனின்றி உயிரழந்தனர்.
மாதவரம் சந்தோஷ்நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் - கஜலட்சுமி தம்பதியின் 7 வயது இரட்டை குழந்தைகளான தக்சன், தீக்சா ஆகியோருக்கு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்கள்.
தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டும் காய்ச்சல் தொடர்ந்ததால், சந்தோஷ்குமார்-கஜலட்சுமி தம்பதிகள் தங்களது குழந்தைகளை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்த போது, குழந்தைகள் இருவருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது உறுதிசெய்யப்பட்டது. மருத்துவர்கள், குழந்தைகளுக்கு தனி அறை ஒதுக்கி சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில்,சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலையில் குழந்தைகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் அரசர் சீராளன்,
"உயிரிழந்த குழந்தைகள் இருவரும் 5 நாள் காய்ச்சலுக்குப் பிறகே மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவித்தார். இருவரும் ஏற்கனவே அபாயக் கட்டத்தில் இருந்ததால், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்கவில்லை என்ற அவர், காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.