கோரத்தாண்டவம் ஆடிய டிட்லி:ஆவேசமாக கரையை கடக்கும் வீடியோ!
Home > தமிழ் newsவங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்லி புயல், கோபால்பூருக்கும் (ஒடிஸா), கலிங்கப்பட்டினத்துக்கும் (ஆந்திரம்) இடையே இன்று காலை கரையைக்கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 140 முதல் 150 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. புயலின் தாக்கம் காரணமாக ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மரங்கள் முறிந்து விழுந்தன. புயலின் தாக்கம் அடுத்த மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கும் பகுதியை வானிலை மையம் முன்கூட்டியே அறிவித்ததால், முன்னெச்சரிக்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். கரையைத் தாக்கியபின்னர் இன்று பிற்பகலுக்குள் புயல் வலுவிழந்து மேற்கு வங்கம் நோக்கி நகரும் என்று புவனேஸ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொல்கத்தாவிலும் இன்று பலத்தமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, ஒடிஸாவின் கடலோர மாவட்டங்களான புரி, கேந்தரபரா, ஜகத்சிங்பூர், குர்டா, கஞ்சம் ஆகிய 5 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
மேலும், ஒடிஸா, ஆந்திரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு 1,000 தேசிய பேரிடர் மீட்புப் படையினரை மத்திய அரசு அனுப்பிவைத்துள்ளது. ஒடிஸாவில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
#WATCH: Latest visuals from Andhra Pradesh's Srikakulam after #TitleCyclone made a landfall. pic.twitter.com/itSoHD16wk
— ANI (@ANI) October 11, 2018