Looks like you've blocked notifications!

சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான 5-வது ஐபிஎல் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

 

இந்தநிலையில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சிலர் மைதானத்தில் காலணிகளை வீசி எறிந்து, காவிரி விவகாரத்தில் தங்களது உணர்வினை வெளிப்படுத்தினர்.

 

இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டு போட்டி 2 நிமிடங்கள் தடைபட்டது. பின்னர் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றினர்.

 

இதில் போராட்டக்காரர்கள் வீசி எறிந்த காலணிகள், சென்னை வீரர் ஜடேஜா அருகில் சென்று விழுந்தது. இதனைக் கண்ட அவர் அதனை உதைத்துக் கால்பந்து விளையாடினார்.

 

அதற்குள் ஊழியர் ஒருவர் ஓடிவந்து அந்தக்காலணிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS