ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன் அணியில் நடந்தது என்ன? என்பதை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி விருது விழா வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறுகையில்,"எல்லோரும் நினைக்கிறார்கள் இறுதிப்போட்டிக்கு முன் நாங்கள் தீவிரமாக ஆடுகளம் குறித்து உரையாடியிருப்போம் என்று. ஆனால் நாங்கள் 5 நொடிகள் உரையாடி இருந்தாலே பெரிய விஷயம். பிளெமிங் போய் கோப்பையை வெல்லுங்கள் பாய்ஸ் என்றார், வென்றார்கள்.

 

நாங்கள் நீண்ட கூட்டங்கள் எதுவும் நடத்தவில்லை.அதேபோல அதிகப்படியான நேரம் எடுத்து எந்தவொரு மீட்டிங்கையும் நடத்தவில்லை. ஒவ்வொருவரும் தங்களது பொறுப்புகளில் தெளிவாக இருந்தனர். அதனால் சும்மா ஒரு அணியின் கேப்டன், பயிற்சியாளர் என்பதற்காக வீரர்களைக் கூட்டி ஏதாவது கூறியே ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை,''என தெரிவித்துள்ளார்.

 

 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS