இதுவரையில் மொத்தம் 11 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த நிலையில் ஒட்டுமொத்த ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு குறித்து பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் ஆய்வொன்றை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டது.

 

அந்த வகையில் ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு விவரம் வருமாறு:

 

சென்னை சூப்பர் கிங்ஸ் - 65 மில்லியன் டாலர்கள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- 62 மில்லியன் டாலர்கள்

ஹைதராபாத் சன் ரைசர்ஸ் - 54 மில்லியன் டாலர்கள்

மும்பை இந்தியன்ஸ்- 53 மில்லியன்  டாலர்கள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- 49 மில்லியன் டாலர்கள்

டெல்லி டேர் டெவில்ஸ் - 44மில்லியன் டாலர்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ் - 43 மில்லியன் டாலர்கள்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் - 40 மில்லியன் டாலர்கள்.

 

இதில் கடந்த ஆண்டுகளை விட சன்ரைசர்ஸ் அணியின் பிராண்ட் மதிப்பு 16% அதிகரித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் ஐபிஎல் பிராண்ட் மதிப்பு 37% அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு 5.3 பில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS