வெள்ளம் புகுந்ததால் ஊருக்குள் புகுந்த முதலைகள்.. பீதியில் அலறும் மக்கள்!

Home > தமிழ் news
By |

ஆஸ்திரேலியாவில் பெய்துவரும் வரலாறு காணாத கனமழையால் அந்நாட்டு மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

வெள்ளம் புகுந்ததால் ஊருக்குள் புகுந்த முதலைகள்.. பீதியில் அலறும் மக்கள்!

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் கடந்த 7 நாட்களாக வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்துவருகிறது. இதில் குயின்ஸ்லாந்து உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மேலும் அணை மற்றும் ஏரிகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் விளை நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மேலும் சாலைகளில் முதலைகள் மற்றும் பாம்புகள் இருப்பதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு வருகின்றனர். இந்த வெள்ளத்தால் பள்ளிகள், விமான நிலையங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு வேகமாக மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில் டவுன்ஸ்வில்லே என்னும் நகரத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது மழை பெய்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

AUSTRALIA, FLOOD, CROCODILES, SNAKES