‘எங்க இருந்தாலும், உன்ன கண்டுபிடிப்பேன்’.. கடும் கோபத்துடன் கிரிக்கெட் பிரபலம் ட்வீட்!

Home > தமிழ் news
By |
‘எங்க இருந்தாலும், உன்ன கண்டுபிடிப்பேன்’.. கடும் கோபத்துடன் கிரிக்கெட் பிரபலம் ட்வீட்!

நியூஸிலாந்தின் கிரிக்கெட் வீரரும், ‘பிளாக் கேப் ஸ்கிப்பர்’ என்கிற புகழுக்குச் சொந்தக் காரருமான பிரெண்டன் மெக்கல்லம் மிகக் கடுமையான ட்வீட் ஒன்றை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளபடி தனது கோபத்தைக் காட்டியுள்ளார். நியூஸிலாந்து அணியின் மிக முக்கியமான தொடக்க ஆட்டக்காரரும் பிராண்டம் மெக்கல்லம்மின் சகோதரருமான நாதன் மெக்கல்லம் இறந்துவிட்டதாக ட்விட்டர்வாசி ஒருவரால் பரப்பப்பட்ட தவறான மற்றும் முறையற்ற ட்வீட்டினால் பலரும் அதிருப்தியும் அதிர்ச்சியும் அடைந்தனர். 

 

இந்த நிலையில் நாதன் மெக்கல்லம், ‘தான் உயிருடன் இருப்பதாகவும், இன்னும் சாதிக்கவிருப்பதாகவும், அனைவருக்கும் எனது அன்புகள், இந்த தவறான வதந்தியை-செய்தியை நம்ப வேண்டாம்’ என்றும் தன் புகைப்படத்துடன் ட்வீட் போட்டு நிரூபித்தார். 

 

ஆனாலும் கடும் கோபமுற்ற, நாதனின் சகோதரர் பிரெண்டன் மெக்கல்லம், ‘எனது சகோதரர் இறந்துவிட்டார் என்கிற தவறான செய்தியை ட்விட்டரில் யாரோ திட்டமிட்டு பரப்பச் செய்திருக்கிறார்கள். நான் இதயம் அதிர்ந்து நியூஸிலாந்துக்கு விமானத்தில் திரும்பிக்கொண்டிருக்கிறேன். இந்த செய்தி உண்மை அல்ல. இந்த தவறான செய்தியை பரப்பியவர்கள் யாராக இருந்தாலும் எப்படியாவது கண்டுபிடிப்பேன்’ என்று எச்சரித்துள்ளார். இந்த ட்வீட் வைரலானதோடு, நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கான ரசிகர்களுக்கான ட்விட்டர் கணக்கின் பக்கத்தில்தான் இந்த செய்தி வெளியானதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற நாதன் மெக்கல்லம், 84 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், 63 டி20 போட்டிகளில் விளையாண்டவர். இதேபோல் பிரெண்டன் மெக்கல்லம் 101 டெஸ்ட் போட்டிகளில், 260 ஒருநாள் போட்டிகளிலும் விளையாண்டவர். தற்போது டி10 லீக் போட்டியில் முனைப்பை செலுத்தி வருகிறார். 

CRICKETPLAYER, TWEET, RUMOUR, VIRAL, BRENDONMCCULLUM, NATHANMCCULLUM, FAKENEWS