கிரிக்கெட் விளையாட ...'இந்திய வீரருக்கு வாழ்நாள் தடை'...அதிரடி நடவடிக்கை!
Home > News Shots > தமிழ் newsதான் 23 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் சேர்க்கப்படாததால்,ஆத்திரத்தில் தேர்வுக்குழு சேர்மனை தாக்கிய விவகாரத்தில் அனுஜ் தேடாவிற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி கிரிக்கெட் தேர்வு குழு தலைவர் அமித் பாண்டாரியை தாக்கியதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு,கிரிக்கெட் வீரர் அனுஜ் தேடாவிற்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் என டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர்,ராஜத் ஷர்மா தெரிவித்துள்ளார்.டெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் மைதானத்தில் பயிற்சி அளித்து கொண்டிருந்தபோது பண்டாரி 15 பேர் கொண்ட குழுவால் கடுமையாக தாக்கப்பட்டார்.உடனே அங்கிருந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
இரும்பு கம்பி மற்றும் ஹாக்கி மட்டையால் தாக்கியதில் அவருக்கு தலை மற்றும் கால்களில் கடுமையான காயம் ஏற்பட்டது.தகவலறிந்து காவல்துறையினர் வருவதற்குள்,அவரை தாக்கிய கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.மேலும் 23 வயதுக்குட்பட்டோருக்கான தேர்வை நியாயமான முறையில் நடத்தவிடாமல் தடுப்பதற்கே அனுஜ் தேடா இந்த தாக்குதலை அரங்கேற்றியதாக,டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ராஜத் ஷர்மா தெரிவித்துள்ளார்.