‘லயனின் பந்துவீச்சை சமாளிக்க இப்படி பண்ணுங்க’.. கோலிக்கு ஐடியா கொடுத்த கிரிக்கெட் பிரபலம்!

Home > தமிழ் news
By |
‘லயனின் பந்துவீச்சை சமாளிக்க இப்படி பண்ணுங்க’.. கோலிக்கு ஐடியா கொடுத்த கிரிக்கெட் பிரபலம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா  விளையாடும் தொடர் கிரிக்கெட் போட்டியில், சிறப்பாக ஆடிவரும் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளரான  நாதன் லயன், இதுவரை 82 டெஸ்ட்களில்  334 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். தற்போது இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையாயான இந்த போட்டியில் கூட 8 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டி வருகிறார். 

 

அவரை சமாளித்தாலே போதும், இந்திய அணிக்கு பாதி வெற்றி உறுதியாகிவிடும் என்கிற நிலையில், இந்திய அணியினர் அவரின் பந்துவீச்சை சமாளிக்க சற்றே திணறினர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன், சவுரவ் கங்குலி, நாதன் லயனின் பந்துவீச்சை எவ்வாறு சமாளிக்கலாம் என்று கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் அடங்கிய அணிக்கு ஐடியா கொடுத்துள்ளார். 

 

அதன்படி,  ‘ நாதன் லயன், ஆஃப் சைடுக்கு வெளியில் வீசும் பந்துகளை இந்திய வீரர்கள் தடுத்து ஆடுவதுதான் லயனின் வெற்றிக்கு ஏதுவாக அமைந்துவிடுகிறது. அவரை தடுத்து ஆடுவதற்கு பதிலாக, துணிச்சலான ஃபீல்டிங் மூலமாகவும், துடிப்பான பேட்டிங் மூலமாகவும் அடித்து ஆடினாலே அவரை விழ்த்துவதோடு மட்டுமல்லாமல் 300 ரன்களுக்கு மேல் ஸ்கோர் பண்ணலாம்’ என்று கங்குலி அறிவுரை வழங்கியுள்ளார். 

 

‘சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன், வார்னே, முரளிதரன் உள்ளிட்டோரை போன்றவர் அல்ல’ என்று கூறிய கங்குலி, ‘துணைக்கண்டத்துக்கு வெளியே சென்று இந்தியர்கள் இவ்வாறு தடுமாறுவது கவலை அளிக்கிறது’ என்று கூறியுள்ளார். மேலும் இதனை கோலிக்கு, குறுஞ்செய்தியாக அனுப்ப நினைத்ததாகவும் கூறியுள்ளார். இதனிடையே வரும் டிசம்பர் 26-ஆம் தேதி மெல்போர்னில் தொடங்க இருக்கும் 3-வது டெஸ்ட் போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. 

AUSVIND, TEAMINDIA, VIRATKOHLI, SOURAVGANGULY, CRICKET, SPORTS