அமெரிக்காவின் புகழ் பெற்ற டைம் இதழ் ஆண்டுதோறும் செல்வாக்கு மிக்க 100 பேர் பெயர்களை வெளியிடுவது வழக்கம். பின்னர் இந்த 100 பேரிலிருந்து ஒருவர் `Person of the Year' ஆகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

 

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் டைம் இதழின் அட்டைப்படத்தில் இடம்பிடிப்பர். இந்த நிலையில், டைம் இதழ் இந்தாண்டு வெளியிட்ட 100 செல்வாக்கு மிக்க நபர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இடம் பிடித்துள்ளார்.

 

இந்த பட்டியலில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், ஓலா கேப்ஸ் ஓனர் பவானிஷ் அகர்வால் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். டைம் இதழின் அட்டைப்படத்தை இந்திய பிரதமர் மோடி இருமுறை அலங்கரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS