செக் மோசடி வழக்கில் பிரபல இந்திய வீரர் முகம்மது ஷமிக்கு, கொல்கத்தா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

 

தன்னை மனரீதியாகவும்,உடல்ரீதியாகவும் துன்புறுத்திய தனது கணவர் முகம்மது ஷமி தனது செலவுக்கு மாதம் ரூ.10 லட்சம் தர வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.இதைத்தொடர்ந்து  தனது மனைவி பெயரில் ரூ.1 லட்சத்துக்கு ஷமி செக் அளித்து இருந்தார்.

 

ஆனால் இந்த செக் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது இதை தொடர்ந்து அவர் மீது செக் மோசடி வழக்கை அவர் தொடர்ந்தார். இந்த வழக்கில் செப்டம்பர் 20-ந்தேதி ஷமி நேரில் ஆஜராக வேண்டும் என, கொல்கத்தாவின் அலிப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

முகம்மது ஷமி தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கவுள்ளது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS