"எண்டர்டெயின்மெண்ட் பேங்க் ஆஃப் இந்தியா"...இது புதுவகை மோசடி!

Home > தமிழ் news
By |
"எண்டர்டெயின்மெண்ட் பேங்க் ஆஃப் இந்தியா"...இது புதுவகை மோசடி!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நகை வாங்கிவிட்டு எண்டர்டெயின்மெண்ட் பேங்க் ஆஃப் இந்தியா என்று அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஏமாற்றிய ஜோடியை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

 

பஞ்சாப் மாநிலம் ஜோதன் நகரில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில்,நகை வாங்க வேண்டும் காரில் ஒரு ஜோடி வந்துள்ளது.நகை கடையில் இருந்த பல வகை நகைகளை பார்த்த பின்பு 56 கிராம் மதிப்பிலான நகைகளை வாங்கியுள்ளது.இதற்கான தொகை ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை காரில் இருந்து எடுத்து வந்து அந்த ஜோடி, நகைக் கடையின் உரிமையாளர் ஷியாம் சுந்தர் வர்மாவிடம் கொடுத்து விட்டு அவசர அவசரமாக கிளம்பியுள்ளார்கள்.

 

நகை வாங்கிய ஜோடி சென்ற பின்பு கடையின் உரிமையாளர் பணத்தை லாக்கரில் வைத்தார்.அப்போது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.காரணம் அந்த ஜோடி அளித்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயில் எண்டர்டெயின்மெண்ட் பேங்க் ஆஃப் இந்தியா என்று எழுதியிருந்தது.அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த உரிமையாளர் ஷியாம் சுந்தர் வர்மா காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்,கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

CCTV, ENTERTAINMENT BANK OF INDIA, LUDHIANA