Looks like you've blocked notifications!
கைதாகி அடைக்கப்பட்ட மண்டபத்தில் திருமணம் செய்து வைத்த மு.க.ஸ்டாலின்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினாவில் மறியலில் ஈடுபட்ட கைதான  மு.க.ஸ்டாலின், புரசைவாக்கம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

மு.க.ஸ்டாலினுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர் ஒருவருக்கு அந்த மண்டபத்திலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக, வேளச்சேரி விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் இந்த திருமண நடைபெற இருந்த நிலையில், திருமாவளவன் மறியலில் ஈடுபட்டு கைதானதால், அவர் அடைக்கப்பட்ட திருமண மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

 

மு.க.ஸ்டாலின், திருமாவளவன், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில், திருமண ஜோடியின் உறவினர்கள் ஆசீர்வாதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS