'சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி'...ஆணவ கொலை செய்யப்பட்ட கொடூரம்!
Home > தமிழ் newsகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியை பெண் வீட்டாரே ஆணவக்கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த வெங்கடேஷ்புரம் பகுதியை சேர்ந்தவர் நந்தீஷ்.ஐடிஐ முடித்துவிட்டு ஓசூர் பேருந்து நிலையம் அருகே தனியார் இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கிருஷ்ணகிரியில் உள்ள மகளிர் கல்லூரியில் பயின்று வந்தவர் ஸ்வாதி.இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.இந்நிலையில் கல்லூரிக்கு சென்று வரும் நேரத்தில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர்.
இருவரும் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்த போது,இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இரு வீட்டிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இருவரும் வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்தப்பின்னர் தான் வேலை செய்யும் நிறுவனம் அருகிலேயே இருவரும் ஓசூரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். நந்தீஷின் வீட்டில் அவரது சகோதரர் சங்கர் மட்டும் தொடர்பில் இருந்துள்ளார். தனது சகோதரனைப் பார்க்க கடந்த 11-ம் தேதி சங்கர் ஓசூர் சென்றுள்ளார். ஆனால் அங்கு நந்திஷ், சுமதி இருவரையும் காணவில்லை.
அவர்கள் எங்கே போனார்கள் என்பது தெரியாததால்,சங்கர் அவர்களின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டார்.ஆனால் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.அவர்களை வெளியில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க இயலவில்லை.இதையடுத்து தனது சகோதரன் மற்றும் அவரது மனைவி இருவரையும் காணவில்லை என ஓசூர் காவல் நிலையத்தில் சங்கர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் இவர்கள் இருவரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே உள்ள மலஹள்ளிப் பகுதி காவிரி ஆற்றில் இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதுதகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், இரு உடல்களையும் மீட்டனர்.இருவர் உடலும் அடையாளம் காணமுடியாத அளவுக்கு ஊதிப்போய் இருந்தது.மேலும் ஆணின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் நீரில் மூழ்கிய நிலையிலும், பெண்ணின் உடல்கயிற்றால் கட்டப்பட்டு நீரில் மூழ்கிய நிலையிலும் கிடந்தது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக,காவல்துறையினர் வீசாரணை மேற்கொள்வதை அறிந்த சுவாதியின் தந்தை சீனிவாசன் என்பவரும் சில உறவினர்களும் கிருஷ்ணகிரி எஸ்பி அலுவலகத்தில் சரணடைந்தனர்.அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மாண்டியா மாவட்டத்தில் மலவள்ளி தாலுக்காவில் சிவசமுத்திரம் காவிரி ஆற்றில் கிடந்த உடல்கள் நந்திஷ், சுவாதியின் உடல்கள் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், காதல் திருமணம் செய்து கொண்டதால், நந்திஷ், சுவாதி இருவரும் ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டிருப்பதை காவல் துறையினா் உறுதி செய்துள்ளனர்.
சாதி மறுப்பு திருமணம் செய்ததால் உடுமலை சங்கர் ஆணவக்கொலை செய்யப்பட்டார்.இந்நிலையில் நந்திஷ், சுவாதி ஆணவபடுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.