திருமண பேச்சுவார்த்தை தள்ளிப்போனதால் தற்கொலை செய்துகொண்ட இளம் தம்பதியர்!
Home > தமிழ் news
உத்திர பிரதேசத்தில் திருமணம் தள்ளிப்போனதால் இளம் தம்பதிகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசத்தில் காஸியாபாத் அருகே, 23 வயது மதிக்கத்தக்க இளம் தம்பதிகளான சுபோஷ் காந்த் மற்றும் பூஜா சிங் இருவரும் காதலித்து வந்ததை அடுத்து, அதனை வீட்டில் கூறியுள்ளனர். இதன் பின்னர் இவர்களுக்கு திருமணம் செய்ய இருவீட்டார் சம்மதத்துடன் முடிவெடுக்கப்பட்டது.
ஆனால் திருமணத்துக்கு முன்பாகவே, அடிப்படையில் இவர்களின் காதல் திருமணத்தின் மீதான அதிருப்தியினால் இருவீட்டாரும் ஒரு விதத்தில் ஒருவரையொருவர் இணக்கமாக இல்லாமல் இருந்துள்ளனர். இதனிடையே திருமணம் செய்வதற்கான பேச்சுகளில் ஒவ்வொருவரின் ஆலோசனையும் யோசனையும் இருவீட்டாருக்கும் வித்தியாசப்பட்டது.
இந்நிலையில் மாப்பிள்ளை வீட்டார் கேட்ட, வரதட்சணைத் தொகையை கொடுக்க, பெண் வீட்டார் முன்வரவில்லை எனக் கூறி பிரச்சனை நிகழ்ந்துள்ளது. இந்த பேச்சு, சுமூகத்துக்கு வரவில்லை என்பதால், திருமண பேச்சுவார்த்தையை பெற்றோர்கள் தள்ளிப்போட்டனர்.
இதனால் இதனால் அதிருப்தியும் விரக்தியும் அடைந்த தம்பதிகள் மன உளைச்சலால் மருந்தகத்தில் விஷம் வாங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதற்கு முன்பாக இருவரும் ரயில் நிலையத்துக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இருவீட்டாரும் புகார் அளிக்காததால், இந்த தற்கொலை பற்றி விசாரிக்கத் தொடங்கவில்லை என காவல் துறையினர் கூறியுள்ளனர்.