தன்னம்பிக்கை, விடாமுயற்சிக்கு மற்றுமொரு உதாரணமாக பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி துணை கலெக்டராக பொறுப்பேற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

மகாராஷ்டிரா மாநிலம் உஹான்ஸ்நகரைச் சேர்ந்த பிரன்ஞால் பாடில், சிறு வயதில் கண்பார்வையை இழந்தவர். எனினும் தனது தன்னம்பிக்கையை சிறிதும் கைவிடாமல் பெற்றோரின் உதவியுடன் பட்டப்படிப்பை முடித்தார்.

 

கடந்த 2016ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வை எழுதிய பிரன்ஞால் அதில் தேர்வு பெற்றார். தனது விடாமுயற்சியால் கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திற்கு, துணை கலெக்டராக கடந்த மே மாதம் இவர் பொறுப்பேற்றுள்ளார்.இந்தியாவின் பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவருக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

 

முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வெழுதி பிரன்ஞால் அதில் தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | JUN 30, 2018 6:46 PM #KERALA #MUMBAI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS