ரெயில்வே நிலையத்தில் உள்ள இலவச வைஃபை மூலம் படித்து, கூலித்தொழிலாளி ஒருவர் அரசுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

 

கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருபவர் ஸ்ரீநாத். 12-ம் வகுப்பு படித்துள்ள இவர் மூட்டை தூக்கிக்கொண்டே அரசுத்தேர்வுகளுக்குப் படித்து வந்தார்.

 

அரசுப்பணிகளுக்காக கேரள அரசு சார்பில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வை மூன்று முறை எழுதி அதில் தோல்வியடைந்த ஸ்ரீநாத், விடாமுயற்சி செய்து 4-வது முறையாக அதில் வெற்றி பெற்றுள்ளார். 

 

இதுகுறித்து அவர், " ரெயில் நிலையத்தில் உள்ள இலவச வைஃபை பயன்படுத்தி படித்தேன். மூட்டை தூக்கும்போது பாடங்களை ஹெட்போனில் போட்டு கேட்பேன். என்னுடைய முழுக்கவனமும் அதில் தான் இருக்கும்,'' எனத் தெரிவித்துள்ளார்.

BY MANJULA | MAY 9, 2018 11:18 AM #RAILWAY #KERALA #WIFI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS