கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டசபை அமைந்துள்ளது. நடப்பு சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 104 தொகுதிகளிலும், ஆளும் காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

 

ஆட்சி அமைக்க தேவையான 112 தொகுதிகளை எந்த கட்சியும் கைப்பற்றவில்லை. இதனைத்தொடர்ந்து காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்தது.

 

இதனையடுத்து பா.ஜனதாவும், காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியும் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் கோரிக்கை விடுத்து உள்ளது. இதற்கிடையில் பாஜக ஆளுநரிடம் ஒருவார காலம் அவகாசம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை பஞ்சாப் மற்றும் ஆந்திரா ரிசார்ட்டுகளில் தங்கவைக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எம்.எல்.ஏ-க்கள் கட்சி தாவுவதைத் தடுக்கும் வகையில் இந்த நகர்வு அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS