பவானி ஆற்றில் சிக்கித்தவித்த தனியார் கல்லூரி மாணவர்களை, காவல் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

 

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 11 பேர் அங்குள்ள பவானி ஆற்றில் நேற்று குளிக்க சென்றனர். அப்போது தண்ணீர் வரத்து குறைவாக இருந்ததால், ஆற்றின் மறுகரைக்கு நீந்தி சென்று குளித்தனர்.திடீரென யாரும் எதிர்பாராத விதமாக ஆற்றில் தண்ணீர் அளவு அதிகரித்தது.

 

இதனால் மாணவர்கள்  கரைக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த  மேட்டுப் பாளையம் காவல்துறையினர், உடனடியாக அங்கு விரைந்து சென்று பரிசல்காரர்களை வைத்து மாணவர்களை பத்திரமாக மீட்டனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS