செல்ஃபி மோகத்தால் வடமாநிலத்தவரும் காப்பாற்ற முயன்ற தமிழ் மாணவரும் அணையில் விழுந்து பலி!

Home > தமிழ் news
By |
செல்ஃபி மோகத்தால் வடமாநிலத்தவரும் காப்பாற்ற முயன்ற தமிழ் மாணவரும் அணையில் விழுந்து பலி!

செல்ஃபி மோகம் எப்போது தொடங்கியது என்று தெரியவில்லை.  பிறரிடம் மொபைலைக் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொள்வது நமக்காக என்பதும், நமக்கு நாமே ஏதேனும் ஒரு இடத்துடன், ஒரு நபருடன், பொருளுடன் எடுத்துக்கொள்ளும் செல்ஃபி பிறருக்காக என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் செல்ஃபி எடுக்க முயன்றவர் அணையில் விழுந்து பலியாக, அவரைக் காப்பாற்ற முயன்றவர் பலி ஆகியுள்ள சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஓசூர் அருகே, கெலவரப்பள்ளி அணைக்கு வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் சென்றுள்ளனர். அவர்கள் செல்ஃபி எடுத்துக்கொள்ளும்போது தவறிப்போய் விழுந்ததில் நீரில் மூழ்கி இரண்டு பேர் பலி ஆகியுள்ளனர். அதில் ஒருவர் தவறி விழுந்த வடமாநிலத்தவரை காப்பாற்ற முயன்ற தமிழ் மாணவர் ஆவார்.


வடமாநிலத்தை சேர்ந்த நபர்கள் 3 பேர் செல்ஃபி எடுக்கும்போது, அவர்கள் சற்றும் எதிர்பாராத விதமாக அணையில் ஒருவர் தவறி விழுந்ததும், அருகில் இருந்த இரண்டு வட மாநிலத்தவர்களும் பயத்தில் தப்பி ஓடியுள்ளனர்.


ஆனால் தவறி விழுந்த வடமாநில நபரான தபேந்திரனை காப்பாற்றும் முனைப்பில் அருகில் இருந்த கல்லூரி மாணவர் கேசவன் முயற்சிக்க, அவரும் பரிதாபகரமாக அணையில் தவறி விழுந்து பலியாகியுள்ளார்.  ஆபத்துக்கு காப்பாற்ற போன கேசவன் பலியாகியுள்ள சம்பவமும், செல்ஃபி மோகத்தினால் தவறி விழுந்து உயிரிழந்த தபேந்திரனின் மரணமும், நண்பர்கள் விழும்போது தப்பி ஓடிய வட மாநில நண்பர்களின் செயலும் பலரை பதற வைத்துள்ளது.

COLLEGESTUDENT, COLLEGESTUDENTS, KRISHNAGIRI, HOSUR, SELFIE, SELFIEACCIDENT