வைஃபை-க்கு இப்படியா பேர் வெப்பாங்க.. நகர மக்களை பதறவைத்த இளைஞர்!
Home > தமிழ் newsதனிநபர் பயன்படுத்தும் வைஃபை கணக்குக்கு 'லஷ்கர் இ தாலிபான்' என்று விளையாட்டாக பெயர் வைத்த கல்லூரி மாணவர் போலீஸாரிடம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிக அண்மையில் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் இடைடேயான உறவில் சில மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல், ஜைஸ்-இ-முகமது அமைப்பு இந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றதை அடுத்தும் கூட பாகிஸ்தான் தரப்பில் இருந்து கண்டனங்கள் எழாததால் பாகிஸ்தான் மீது பெரும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டிருந்த, ‘இந்தியாவுடன் இணக்கத்தில் இருக்கும் நாடு’ என்கிற அந்தஸ்தினை இந்தியா திரும்பப் பெற்றதோடு, பாகிஸ்தானில் இருந்து வரும் பொருட்களுக்கு 200 சதவீதம் சுங்க வரிகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதோடு ஜம்மு- காஷ்மீர் எல்லையில் தீவிர கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், மகாராஷ்டிராவின் கல்யாண் பகுதியில், சில குடியிருப்பு வாசிகளுக்கு தங்களது வைஃபை இணைய கனெக்ஷன்களில் புதிதாக ‘லஷ்கர்-இ-தாலிபான்’ என்கிற பெயரில் வைஃபை நெட்வொர்க் ஒன்று காண்பித்ததை அடுத்து அனைவரும் அதிர்ச்சி ஆகியுள்ளனர். அதன் பின்னர் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அப்போதுதான் கடக்படா பகுதியில் உள்ள அம்ருத் ஹெவன்லி சொசைட்டி அருகே இருந்த அடுக்குமாடி குடியிருப்புப் பகுதி ஒன்றில் தந்தையுடன் வசித்து வந்த கல்லூரி மாணவர்தான் இப்படியான பெயரை விளையாட்டாக தனது வைஃபை நெட்வொர்க் கனெக்ஷனுக்கு பெயராக சூட்டியிருப்பதாக தெரியவந்தது. பின்னர் போலீஸார் அம்மாணவரை எச்சரித்ததும் அவர் பெயரை மாற்றிவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.