கடந்த திங்களன்று சீனாவில் இருந்து திபெத்துக்கு 119 பயணிகளுடன் விமானமொன்று புறப்பட்டு சென்றது. சுமார் 32000 அடி உயரத்தில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானிகள் அறையான ‘காக்பிட்’டில் துணை விமானி இருக்கையின் அருகேயுள்ள கதவு எதிர்பாராதவிதமாக பாதி திறந்து கொண்டது.

 

இதனால் விமானத்திற்குள் காற்று புகுந்தது. காற்று புகுந்தவுடன் உள்ளே இருந்த துணை விமானி பாதி உடல் வெளியிலும், மீதி உடல் விமானத்தின் உள்ளேயுமாக விமானத்துடன் சேர்ந்து அவரும் நடுவானில் பறந்திருக்கிறார். இதனைக்கண்ட பைலட் உடனடியாக அருகில் உள்ள பகுதியில் விமானத்தை பத்திரமாகத் தரையிறக்கி துணை விமானி, பயணிகள் உட்பட சுமார் 120 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

 

நல்லவேளையாக சீட் பெல்ட் போட்டு இருந்ததால் நடுவானில் பறந்த அந்த துணை விமானியின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் முதல்முறையல்ல 3-வது முறை என, சீன ஊடகங்கள் இந்த சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளன.


 

BY MANJULA | MAY 17, 2018 3:11 PM #FLIGHT #CHINA #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS