முதல்வர் ’பஞ்ச்’.. எத்தனை திமுக வந்தாலும் அதிமுகவை கலைக்கும் எண்ணம் நிறைவேறாது!

Home > தமிழ் news
By |
முதல்வர் ’பஞ்ச்’.. எத்தனை திமுக வந்தாலும் அதிமுகவை கலைக்கும் எண்ணம் நிறைவேறாது!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று அளித்த பேட்டியில், முக்கொம்பு அணை உடைந்து போகும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்து உண்மை அல்ல என்றும், அந்த அணை மறுசீரமைக்கப்படும் என்றும் கூறினார். மேலும் மேட்டூர் அணையில் இருந்து அதிக நீர்வரத்து காரணமாக வெளியேறும் நீரை ஏரிகளில் நிரப்புவதற்கான உத்தரவினை பிறப்பித்ததன் பேரில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

 

குறிப்பாக, எத்தனை திமுக வந்தாலும் தங்களது கட்சியையும், மாநிலத்தை ஆண்டுகொண்டிருக்கும் தங்கள் கட்சியின் ஆட்சியையும் கலைக்கக் கூடிய யாருடைய எண்ணமும் ஒருபோதும்  நிறைவேறாது, என்று திட்டவட்டமாக கூறியவர்,
பிற கட்சிகளில் உண்டாகும் அல்லது எழும் பிரச்சனைகளை வைத்து, அரசியல் செய்வதற்காக அதிமுக எப்போதும் தயாராக இல்லை என்றும் கூறியுள்ளார்.

 

முன்னதாக திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபோது, நடப்பு மாநில ஆட்சியை முதுகெலும்பு இல்லாத ஆட்சி என்று விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.