உலக அழகி இறுதி போட்டி:'மேடையிலேயே மயங்கி விழுந்த வெற்றியாளர்'!
Home > தமிழ் news
உலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண், வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் இன்ப அதிர்ச்சியில் மேடையிலேயே மயங்கி விழுந்தார்.இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மியான்மர் நாட்டின் யாங்கோன் நகரில்,மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் உலக அழகி போட்டி நடைபெற்றது.இதில் இந்தியா சார்பில் மீனாட்சி சவுத்ரியும் கலந்து கொண்டார்.அவரும் பராகுவே நாட்டை சேர்ந்த கிளாரா சோஸாவும் இறுதி போட்டிக்கு தேர்வானார்கள்.
இந்நிலையில் வெற்றியாளரை அறிவிக்கும் நேரம் வந்ததும்,இருவரும் கைகோர்த்து நின்று கொண்டிருந்தார்கள்.அப்போது கிளாரா சோஸா உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பாளர் அறிவித்தார்.இதை கேட்டதும் ஆனந்தத்திலும், இன்ப அதிர்ச்சியிலும் கிளாரா மேடையிலேயே மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.உடனே மேடைக்கு வந்த விழா ஏற்பாட்டாளர்கள் அவரை தேற்றி அவருக்கு மகுடத்தை அணிவித்தார்கள்.
இறுதியில் உலக அழகியாக முடிசூட்டப்பட்ட கிளாரா அமெரிக்க அதிபரைச் சந்தித்து அமைதி மற்றும் சகிப்புத் தன்மைக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் போவதாகத் தெரிவித்தார்.