'பெண்ணின் முன் ஆடையின்றி தவறாக நின்றதாக புகார்: பிரபல கிரிக்கெட் வீரருக்கு நஷ்டஈடு!

Home > தமிழ் news
By |
'பெண்ணின் முன் ஆடையின்றி தவறாக நின்றதாக புகார்: பிரபல கிரிக்கெட் வீரருக்கு நஷ்டஈடு!

தன் மீது தவறான செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனத்திற்கு எதிராக,கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் தொடர்ந்த வழக்கில் அவருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த 2015ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து நாட்டில் நடைப்பெற்றது. அப்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெய்ல் தங்கியிருந்த அறையில், மசாஜ் செய்யும் பெண் சென்றதாகவும், அவர் முன் கெய்ல் ஆடையின்றி தவறாக நின்றதாக,ஆஸ்திரேலியாவின் பிரபல செய்தி நிறுவனம்  ஃபேர்ஃபாக்ஸ் கடந்த ஜனவரி 2016ல் செய்தியை வெளியிட்டது.இந்த செய்தி கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதனால் கடும் மனவேதனை அடைந்த கெய்ல்,“தன்னை குறித்து தவறான செய்தி வெளியிட்டதோடு,தன் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக செயல்பட்ட  ஃபேர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் மீது நடவடிக்கையும், தனக்கு இழப்பீடும் வழங்க வேண்டும்.” என ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் கெய்ல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கெய்ல் மீதான குற்றச்சாட்டிற்கு எந்த வித ஆதாரமும் இல்லை எனவும் அவர் மீதான குற்றத்தை ஃபேர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்தால் நிரூபிக்க முடியவில்லை என தீர்ப்பு வழங்கினார்.மேலும்  கெய்லுக்கு $220,770 டாலர் (ரூ. 1 கோடியே 55 லட்சம்) இழப்பீடு வழங்க வேண்டும் என ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல் உச்சநீதிமன்றம் நீதிபதில் லூசி மெக்கல்லம் உத்தரவிட்டுள்ளார்.

CRICKET, CHRIS GAYLE, DEFAMATION, WEST INDIES BATSMAN