BGM Biggest icon tamil cinema BNS Banner
அழகான பெண் குழந்தைக்கு 'அப்பாவான' பிரபல நடன இயக்குநர்!

பிரபல நடன இயக்குநர் சாண்டி-சில்வியா தம்பதியினருக்கு இன்று காலை அழகான பெண் குழந்தை பிறந்தது.

 

இந்த சந்தோஷ தருணம் குறித்து சாண்டி கூறுகையில், "ஒரு இளவரசி என்னுடைய வீட்டிற்குள் வந்தாள். எந்த குழந்தையாக இருந்தாலும் சரி என நான் நினைத்து இருந்தேன். எனது மனைவி பெண் குழந்தை வேண்டும் என ஆசைப்பட்டார்.

 

எனது ஒட்டுமொத்தக் குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இன்று காலை மருத்துவமனையில் எனது குழந்தையை சந்தித்தேன். குழந்தை பிறக்கும் தருணத்தில் எனது மனைவி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். தற்போது எல்லாம் நல்லபடியாக முடிந்து விட்டது,'' என தெரிவித்துள்ளார்.

 

ரஜினி நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் 'காலா' படத்தில் சாண்டி நடன இயக்குநராகப் பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | MAY 23, 2018 7:23 PM #KAALA #SANDY #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS