சின்மயி, லீனா உள்ளிட்டோர் கலந்துகொண்ட #MeToo புகார்கள் குறித்த ஊடக சந்திப்பில் சலசலப்பு!
Home > தமிழ் newsமீடூ புகார் குறித்து, சென்னையில் எழுத்தாளர் மற்றும் ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை, லட்சுமி ராமகிருஷ்ணன்,சின்மயி, ஸ்ரீரஞ்சனி, ஆவணப்பட இயக்குனர் மாலினி ஜீவரத்தினம் மற்றும் பலர் குழுமிய தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் சார்பிலான பத்திரிகையாளர் சந்திப்பில் சலசலப்பு ஏற்பட்டது. முன்னதாக பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீதும், இயக்குனர் லீனா மணிமேகலை இயக்குனர் சுசி கணேசன் மீதும் மீ டூ ஃபோரம் வாயிலாக பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அவைகுறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் நிகழ்ந்த இந்த சந்திப்பில், பேசிய லீனா மணிமேகலை, மீடூ போன்ற இயக்கங்கள் மூலம் பாலியல் குற்றச் சாட்டுகளை மட்டும் கூறுவதோடு அல்லாமல், அந்த குற்றங்கள் கவனிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும், பெண்களின் பிரச்சனைகள் கவனிக்கப்படுவதோடு அல்லாமல, தங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் இதுபோன்ற விவகாரங்களை பொதுவெளிக்குள் கொண்டுவரும் பெண்களுக்கு பணியிடம் தொட்டு முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிலையில் தனது குற்றச் சாட்டுகளை பேஸ்புக்கில் போய் படித்துக்கொள்ளுங்கள் என்று கூறிய லீனா மணிமேகலையின் பதிலால் சர்ச்சை எழுந்தது. நீதிமன்றத்தில் நிற்கவைத்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் மனநிலைக்கு தன்னை ஆளாக்க வேண்டாம் என்றும், நிரூபர்கள் கொஞ்சம் ஹோம் வொர்க் பண்ணிக்கொண்டு வருமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
அதுமட்டுமல்லாம, ஆதாரமற்ற குற்றப்புகார்களாகவே மீ டூ புகார்கள் பார்க்கப்படும் மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசிய லீனா, ‘அதுபோன்ற புகார்களுக்காகவே மீடூ போன்ற தளங்கள் இருப்பதாகவும், அவற்றை முறைப்படுத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகளையும் அடுத்து யாரும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாத முன்னெச்சரிக்கையையும் எடுக்க வேண்டுமென்றும்’ கூறினார்.
பெண்கள் மீதான பாலியல் குற்றச் சாட்டுகளுக்கு துணிந்து வந்து அவற்றை சொல்லும் பெண்களே ஆதாரம் என்பதுதான் மீ டூ ஃபோரமின் அடிப்படை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இதன் மூலம் மாற்றம் உருவானால் அதுவே உண்மையான சமூக மாற்றம்.