கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி ஆய்வு மையம் நாளை மறுநாள் பூமியில் மோதலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2011-ம் ஆண்டு சீனாவால் ஏவப்பட்ட விண்வெளி ஆய்வு மையம், டியாங்காங்- 1 கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பிலிருந்து 2016-ம் ஆண்டு விலகியது.
2013-ம் ஆண்டிலிருந்து, விண்வெளி வீரர்கள் எவரும் இந்த ஆய்வு மையத்திற்கு அனுப்பப்படாத நிலையில், தற்போது இந்த ஆய்வு மையம் பூமியுடன் நாளை மறுநாள் மோதும் என தெரிய வந்துள்ளது.
எந்த இடத்தில் விழும் என சரியாக தெரியாத நிலையில், நியூயார்க், பார்சிலோனா, பெய்ஜிங், சிக்காகோ ஆகிய இடங்களில் விழ வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
சுமார் 8 ஆயிரம் கிலோ எடை கொண்ட இந்த விண்வெளி ஆய்வு மையம், பூமியில் மோதும்போது எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BY SATHEESH | MAR 30, 2018 3:20 PM #TIANGONG-1 #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS