ரொம்ப கோவம் வருதா? அப்ப அடிச்சு நொறுக்குங்க.. அதுக்கு ஒரு கடையையே திறந்த நபர்!

Home > தமிழ் news
By |

பலருக்கு கோபம் வந்தால் என்ன செய்வதென்று தெரியாது. அந்த மன அழுத்தத்தில் எதையாவது தூக்கி போட்டு உடைத்தால் தேவலாம் என்று தோன்றும். 

ரொம்ப கோவம் வருதா? அப்ப அடிச்சு நொறுக்குங்க.. அதுக்கு ஒரு கடையையே திறந்த நபர்!

நம்மில் பலர் கோபம் வந்தால் செல்போன்களை உடைத்திருக்கக் கூடும். அவ்வாறு செய்யும் பொழுது கோபம் வந்த கணத்தில் செய்வதறியாது செய்த செயல்களுக்காக கோபம் கலைந்து, எல்லாவற்றையும் உணர்ந்த பிறகு கடைசியில் ஒரு தெளிவு பிறக்க கூடும். 

ஆனால், அப்படியான தெளிவு வந்தாலும் கோபத்தில் நாம் கொட்டிய வார்த்தைகளையும் உடைத்து சேதப்படுத்திய பொருட்களும் அப்படியே திரும்பி வருமா என்றால் கேள்விக்குறிதான். அதற்காகவே சீனாவின் பெய்ஜிங்கில், ஹான்ஜிங் என்பவர் கோபம் வந்தால் கண்ட பொருட்களை உடைப்பதற்கெனவே ஆங்கர் ரூம் என்றொரு கடையை திறந்துள்ளார். 

இந்த அறையில் கடைக்காரர் கொடுக்கும் பிரத்யேகமான ஆடையை அணிந்துகொண்டு வீட்டு உபயோகப்பொருட்களையோ திருமண புகைப்படங்களை வாடிக்கையாளர் தன் வீட்டில் இருந்து கொண்டு வந்தோ உடைத்து கோபத்தை தீர்த்துக்கொள்ள 30 நிமிடத்துக்கு 5 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுவருகிறது. இங்கு பெரும்பாலும் 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களே வருகின்றனர் என்கின்றார் அந்த கடை ஓனர். 

CHINA, BEIJING, ANGERROOM, PRESSURE, VIRAL