#MeToo-வில் சிக்கிய 7 இசைக்கலைஞர்கள்: மார்கழி உற்சவங்களில் பங்கேற்க முடியாது!
Home > தமிழ் news#Metoo புகாரில் சிக்கிய 7 இசைக்கலைஞர்கள் நீக்கம் செய்யப்படுவதாக மியூசிக் அகடாமி அதிரடியாக அறிவித்துள்ளது. கடந்த காலமாகவே பெண்கள் பாலியல் ரீதியாக தாங்கள் அனுபவித்து வந்த பாலியல் கொடுமைகளை வலைதளத்தில் #Metoo என்கிற ஹேஷ்டேகில் பதிவிடுகின்றனர். அதுவும் தற்போது முழுமை பெற்ற இயக்கமாக பரிமளத்துக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில் திரைத்துறையிலும் பெரும்பாலான பாலியல் புகார்கள் எழுந்தபடி இருக்கின்றன. பாடகர்கள், எழுத்தாளர்கள் என தொடங்கி தற்போது இசைக் கலைஞர்களிடம் சென்று நிற்கும் இந்த புகார்கள் கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் இசைக் கலைஞர்கள் சிலரின் மீதும் வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இருக்கும் மியூசிக் அகாடமி குழுமத்தைச் சேர்ந்த என்.முரளி கூறுகையில், புகார் கொடுக்கும் கலைஞர்கள் மீது அகாடமி கவனம் செலுத்துவதால், இத்தகைய முடிவு என்றும், #Metoo போன்ற இயக்கத்துக்கு துணை நிற்பதன் அவசியத்தையும் பதிவு செய்யவும் இந்த முடிவு என்றும் கூறியுள்ளார். மேலும் #Metoo புகார்களில் சிக்கியுள்ள 7 கர்நாடக இசைக் கலைஞர்களும் மார்கழி உற்சவத்துக்கு செல்லமுடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.