அமெரிக்காவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக சென்னையில் பிறந்து, சென்னை பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற திவ்யா சூர்யதேவரா(39) நியமிக்கப்படவுள்ளார்.

 

திவ்யா சூர்யதேவரா தனது இளநிலை மற்றும் முதுநிலை வணிகவியல் பட்டப்படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்தார். பின்னர் அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலைக்கழக்தில் எம்பிஏ பயில்வதற்காகத் தனது 22-வயதில் அமெரிக்கா சென்றார். தொடர்ந்து பட்டயக் கணக்காளராகவும், நிதி ஆய்வாளராகவும் திவ்யா அங்கு பயிற்சி பெற்றார்.

 

இப்போது, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக மேரி பாரா(வயது56) என்ற பெண் இருந்து வருகிறார். அவரைத்தொடர்ந்து அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பொறுபேற்கும் 2-வது பெண் திவ்யா சூர்யதேவரா என்பது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | JUN 14, 2018 2:25 PM #AMERICA #INDIA #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS