'அவர் நல்லவர் நான்தான் தவறு செய்துவிட்டேன்'.. போலீசாரிடம் கதறிய அபிராமி!

Home > தமிழ் news
By |
'அவர் நல்லவர் நான்தான் தவறு செய்துவிட்டேன்'.. போலீசாரிடம் கதறிய அபிராமி!

கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளை பெற்ற தாயே கொலை செய்த சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

குன்றத்தூர்

சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை அங்கனீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜய் (30). இவரது மனைவி அபிராமி (25). தம்பதிக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரம் என்பவருடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.


கொலை:

இதனால் சுந்தரத்தின் ஆலோசனையின் பேரில் தனது கணவன்,குழந்தைகளைக் கொல்ல அபிராமி முடிவு செய்தார். கணவர் வேலைக்கு சென்றதால் குழந்தைகள் இருவருக்கும் பாலில் விஷம் கொடுத்து அபிராமி கொலை செய்தார்.

 

கோயம்பேடு:

தொடர்ந்து தனது தாலியை அடகுவைத்து கோயம்பேடு சென்று அங்கிருந்து நாகர்கோவில் தப்பிச்சென்றுள்ளார். அங்கிருந்து திருவனந்தபுரம் சென்றுள்ளார்.அபிராமி கொலை செய்துவிட்டு திருவனந்தபுரம் தப்பிச் சென்றுவிட வேண்டும். தான் அங்கிருந்து மற்ற நிகழ்வுகளை நோட்டமிட்டு இரண்டு மூன்று நாட்கள் கழித்து சந்தேகம் வராதபடி, சாதாரணமாகக் கிளம்பி திருவனந்தபுரம் வரவேண்டும் என்பது சுந்தரத்தின் திட்டம்.

 

புகார்:

அதன்படி கும்பலோடு கும்பலாக நின்ற சுந்தரத்தை விஜய் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் கைது செய்தனர். அவரின் செல்போனை சோதித்தபோது அவர்களின் திட்டம் வெளியானது.தொடர்ந்து தனது செல்போனில் இருந்து போலீசார் சொல்லிக்கொடுத்தபடி சுந்தரம் பேச, அதனை நம்பிய அபிராமி போலீசில் வசமாக சிக்கிக்கொண்டார்.

 

வாக்குமூலம்:

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட அபிராமி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், ''அவர் நல்லவர் நான்தான் தவறு செய்துவிட்டேன்.என் குழந்தைகள் மற்றும் கணவரை கொலை செய்தால் தான் நாம் ஜாலியாக இருக்க முடியும் என சுந்தரம் என்னிடம் தெரிவித்தார்.எனவே, கடந்த 30ம் தேதி இரவு விஜய் பிறந்த நாள் பரிசாக இவர்களை கொல்ல முடிவு செய்தேன்.அதன்படி பாலில் 5 தூக்க மாத்திரைகளை கலந்து கணவர், குழந்தைகளுக்கு கொடுத்தேன்.

 

மறுநாள் அதிகாலையில் 3 பேரும் இறந்திருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், கணவன் மற்றும் மகன் அஜய் ஆகியோர் சாகவில்லை. ஆனால், பெண் குழந்தை கார்னிகா படுக்கையிலேயே வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தாள். அடுத்தநாள் எனது கணவர் வேலைக்கு சென்றுவிட்டார். எனது கணவர் வேலைக்கு சென்றவுடன் எனது மகனை மூக்கையும், வாயையும் பொத்தி துடி துடிக்க கொன்றேன்.

 

பின்னர் குழந்தைகளின் சடலத்தையும் படுக்கை அறையில் அருகருகே கிடத்திவிட்டு, இரவு நேரம் நெருங்கி விட்டதால் கணவரின் வருகைக்காக காத்திருந்தேன். அவரை கொலை செய்யும் முடிவில் இருந்தேன்.ஆனால், அன்று இரவு அவர் வீட்டுக்கு வர தாமதமானது. இதனால், கள்ளக்காதலன் சுந்தரம் என்னை வீட்டை விட்டு வெளியே வருமாறு கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்றார்.காலையில் தாலியை அடமானம் வைத்து கன்னியாகுமரிக்கு என்னை அனுப்பிவைத்தார்,'' என வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

சிறைத்தண்டனை:

இவர்கள் இருவர் மீதும் கொலை, கூட்டு சதி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.போலீசார் நேற்று அவரை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அபிராமியை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

MURDER, CHENNAI, ABIRAMI