புனே மைதானத்தில் இன்றிரவு நடைபெறவிருக்கும் போட்டியில், அஸ்வினின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.

 

நடப்பு ஐபிஎல் போட்டிகளில் 8 வெற்றிகளுடன் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்து, பிளே ஆஃப் சுற்றிலும் கால் பதித்துள்ளது.அதே நேரம் பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றில் இடம்பெற கடுமையாகப் போராடி வருகிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கடைசியாக நடைபெற்ற போட்டியில் சென்னை அணியை பஞ்சாப் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதனால் கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு சென்னை அணி இந்த போட்டியில் பழிவாங்குமா? என, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இரு அணி வீரர்களின் விவரம் பின்வருமாறு:-

 

சென்னை சூப்பர்  கிங்ஸ்: தோனி(கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, பாப் டூ பிளசிஸ், சாம் பில்லிங்ஸ்,ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சாஹர், ஹர்பஜன்சிங், லுங்கி நிகிடி, ஷர்துல் தாகூர்.

 

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: கிறிஸ் கெயில், லோகேஷ் ராகுல், ஆரோன் பிஞ்ச், டேவிட் மில்லர், கருண் நாயர், மனோஜ் திவாரி, அக்சர் படேல், ஆண்ட்ரூ டை, அங்கித் ராஜ்பூத், அஸ்வின்(கேப்டன்), மோகித் சர்மா.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS