இன்றிரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள முதலாவது பிளே-ஆஃப் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.

 

லீக் போட்டிகளின் 2 ஆட்டங்களிலும் ஹைதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. இதனால் சென்னை அணியை பழிவாங்க ஹைதராபாத் அணி முயலும்.

 

அதேநேரம் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனலுக்கு செல்லலாம் என்பதால், 2 அணிகளும் அதற்காக கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும். இதனால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இரு அணி வீரர்களின் விவரம் பின்வருமாறு:-

 

சென்னை சூப்பர்  கிங்ஸ்: தோனி(கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, ஷேன் வாட்சன் , பாப் டூ பிளசிஸ், ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சாஹர், ஹர்பஜன்சிங், லுங்கி நிகிடி, ஷர்துல் தாகூர்.

 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: கேன் வில்லியம்சன்(கேப்டன்), ஷிகர் தவான், மணீஷ் பாண்டே, சாஹிப் அல்ஹசன், ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, யூசுப் பதான்,  ரஷீத் கான், புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா, கார்லோஸ் பிரத்வெயிட்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS