மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களைக் குவித்தது. 

 

இதனைத் தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி+கோப்பை என்ற இலக்குடன், களமிறங்கிய சென்னை அணி 18.3 ஓவர்களில் 181 ரன்களைக் குவித்து வெற்றி பெற்றது.

 

இந்த வெற்றியின் மூலம் 3-வது முறையாக சென்னை அணி கோப்பையை வென்று மகுடம் சூடியுள்ளது. கோப்பையை வென்ற சென்னை அணியின் வீரர்கள் தங்களது வாரிசுகளுடன் இணைந்து வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS