புகைப்பட உதவி @IPL

ராஜீவ்காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் இன்று மாலை நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 182 ரன்களைக் குவித்தது.

 

இதனைத் தொடர்ந்து 183 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி, சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து திணறியது.

 

குறிப்பாக சென்னை அணியின் தீபக் சாகர் சிறப்பாகப் பந்துவீசி, ஹைதராபாத் அணியின் மணீஷ் பாண்டே, தீபக் ஹூடா, புவி உள்ளிட்ட முக்கிய வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தார்.

 

எனினும் ஹைதராபாத் அணியின் கேன் வில்லியம்சன்(84) தனது கேப்டன் பொறுப்பை உணர்ந்து பொறுப்பாக ஆடி சென்னையை அச்சுறுத்தினார். ஆனால் சென்னை அணியின் பிராவோ 18-வது ஓவரின் இறுதியில் அவரை ஆட்டமிழக்கச் செய்தார்.

 

மறுபுறம் சிறப்பாக அடித்து ஆடிய யூசுப் பதான்(45) தாகூர் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் அணியின் ரன்ரேட் குறைந்தது. 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு, ஹைதராபாத் அணி 178 ரன்களை மட்டுமே எடுத்தது.

 

முடிவில் சென்னை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் தீபக் சாகர் அதிகபட்சமாக, 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS