இந்திய அழகியாக 'சென்னை' மாணவி தேர்வு!

நேற்றிரவு நடைபெற்ற மிஸ்.இந்தியா அழகிப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த மாணவி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

 

மிஸ்.இந்தியா அழகிப்போட்டி மும்பையில் நேற்றிரவு நடைபெற்றது.போட்டியின் இறுதியில் சென்னையைச் சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ்(19) என்பவர் மிஸ் இந்தியாவாக தேர்தெடுக்கப்பட்டார். அவருக்குக் கடந்த வருட மிஸ் இந்தியாவான மனுஷி சில்லர், கிரீடத்தை அணிவித்தார்.

 

போட்டியில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மீனாட்சி செளத்திரியும், ஆந்திர மாநிலத்தைச்  சேர்ந்த ஸ்ரேயா ராவ் என்பவரும் பெற்றனர்.

 

முன்னதாக மிஸ்.தமிழ்நாடு வென்ற அனுக்ரீத்தி வாஸ் இந்தாண்டு நடைபெறும் உலக அழகிப்போட்டிக்கு, இந்தியா சார்பில் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | JUN 20, 2018 11:01 AM #MISS.INDIA #CHENNAI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS